பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 குடியரசு தின அணிவகுப்பின் சிறந்த மாநில அலங்கார ஊர்தியாக உத்தரப் பிரதேசம் ஊர்தி தேர்வு ; மக்கள் விருப்பத் தேர்வு பிரிவில் மகாராஷ்டிரா வெற்றி

प्रविष्टि तिथि: 04 FEB 2022 1:21PM by PIB Chennai

குடியரசு தின அணிவகுப்பு 2022-ன் சிறந்த அலங்கார ஊர்தி மற்றும் சிறந்த அணிவகுப்புக் குழுக்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள்/ பிற துணைப் படைகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புக் குழுக்கள் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் அலங்கார ஊர்திகளை மதிப்பிடுவதற்கு மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

நீதிபதிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், இந்திய கடற்படை அணிவகுப்புக் குழு முப்படைகளில் சிறந்த அணிவகுப்புக் குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப் படைகள்/பிற துணைப் படைகளில் சிறந்த அணிவகுப்புக் குழுவாக மத்திய தொழில்  பாதுகாப்புப் படை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 26, 2022 அன்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உத்தரப்பிரதேசத்தின் அலங்கார ஊர்தி சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருந்தது.

 

கர்நாடகாவிற்கு இரண்டாவது இடமும், மேகாலயாவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.

மக்கள் விருப்பத்  தேர்வு பிரிவில் மகாராஷ்டிரா மாநில   அலங்கார ஊர்தி வெற்றி பெற்றது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795382

----


(रिलीज़ आईडी: 1795472) आगंतुक पटल : 327
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali