சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் திட்டத்தின் கீழ் புனௌரா தாம் சேர்க்கப்பட்டுள்ளது: திரு. ஜி. கிஷன் ரெட்டி

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2022 4:32PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுற்றுலா அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி, கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.

பீகார் அரசிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் படி, புனௌரா தாமை ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் ராமாயண சுற்றில் சுற்றுலா அமைச்சகம் சேர்த்துள்ளது. சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் திட்டத்திலும் புனௌரா தாம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் வருமாறு:

வைஷாலி- அர்ரா- மசாத்- பாட்னா- ராஜ்கிர்- பவபுரி- சம்பாபுரி ஆகிய இடங்களில் உள்ள தீர்த்தங்கர் சார்ந்த சுற்றுலாத்தலங்களின்  மேம்பாட்டிற்கு ரூ 37.20 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புத்தகயாவில் மாநாட்டு மையத்தின் கட்டுமானத்திற்காக ரூ 98.73 கோடியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுல்தாங்கஞ்ச் - தர்மசாலா - தியோகர்  பகுதிகளில் ஆன்மீக சுற்றுலாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக   ரூ 44.76 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிதிஹார்வா - சந்திரஹியா - துர்குலியா பகுதிகளில் காந்தியடிகள் சார்ந்த சுற்றுலாத்தலங்களின் வளர்ச்சிக்காகரூ. 44.65 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மந்தர் மலை மற்றும் அங் பிரதேசத்தில் புனித யாத்திரை மேம்பாட்டிற்காக ரூ. 47.53 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு  இந்த  ஆங்கில செய்தி குறிப்பை  காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795082

 

*********


(வெளியீட்டு அடையாள எண்: 1795188) வருகையாளர் எண்ணிக்கை : 247
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada