தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பட்டதாரிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை.
Posted On:
03 FEB 2022 3:46PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி, கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார் .
நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொள்வதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளைப் பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வது தன்னார்வமானது.
பணி சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக தேசிய பணி சேவை (என்சிஎஸ்) திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வேலை தேடுதல் மற்றும் பொருத்துதல், பணி ஆலோசனை, தொழில்சார் வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு பாடப்பிரிவுகள் பற்றிய தகவல்கள் போன்றவை இவற்றில் அடங்கும். தேசிய பணி சேவை இணையதளத்தில் (www.ncs.gov.in) இச்சேவைகள் ஆன்லைனில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795068
(Release ID: 1795151)