புவி அறிவியல் அமைச்சகம்
2030-க்குள் புதிய இந்தியா என்னும் மத்திய அரசின் கண்ணோட்டத்தில் நீலப் பொருளாதாரம் 6-வது பரிமாணம் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
03 FEB 2022 1:28PM by PIB Chennai
2030-க்குள் புதிய இந்தியா என்னும் மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்த கண்ணோட்டத்தின் 6-வது பரிமாணமாக நீலப் பொருளாதாரம் விளக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறை தீர்வு, ஓய்வூதியங்கள், அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் 2021-22-ல் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில், நீலப் பொருளாதார வரைவுக் கொள்கை ஆவணம், நிபுணர்கள் பணிக்குழுக்களின் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு புவி அறிவியல் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பணிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
நீலப் பொருளாதாரம் மற்றும் பெருங்கடல் மேலாண்மைக்கான தேசிய கணக்கியல் வரையறை, கடலோர சுற்றுலா, கடல் மீன்வளம், மீன்வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல், வர்த்தகம், தொழில் நுட்பம், உற்பத்தி. சேவைகள், திறன் மேம்பாடு, கப்பல் சரக்குப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, கரையோர ஆழ்கடல் எரிசக்தி, உள்ளிட்ட7 முக்கிய அம்சங்கள் இந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ளன.
***************
(Release ID: 1795052)
Visitor Counter : 484