எஃகுத்துறை அமைச்சகம்

ஜனவரி மாதத்தில் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி)யின் சாதனைச் செயல்பாடுகள்

Posted On: 02 FEB 2022 1:22PM by PIB Chennai

எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளரான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி), 2022 ஜனவரி மாதத்தில் 4.56 மெட்ரிக் டன் உற்பத்தியை எட்டியதோடு 4.24 மெட்ரிக் டன் இரும்புத் தாதுவை விற்றது.

கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது உற்பத்தி 18.15 சதவீதமும், விற்பனை 13.4 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

அதோடு, நிறுவனம் தொடங்கபட்டதில் இருந்து எந்த ஜனவரி மாதத்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இரும்பு தாது உற்பத்தி மற்றும் விற்பனை இந்த ஜனவரியில் எட்டப்பட்டுள்ளது.

2022 ஜனவரி வரையிலான 2022-ம் நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் உற்பத்தி 32.88 மெட்ரிக் டன் ஆகவும், விற்பனை 32.60 மெட்ரிக் டன் ஆகவும் இருந்தது. கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது உற்பத்தி 28.14 சதவீதமும், விற்பனை 25.34 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும், இதுவரையிலான எந்த பத்து மாதங்களிலும் இல்லாத அளவுக்கு அதிக இரும்பு தாது உற்பத்தி மற்றும் விற்பனை எட்டப்பட்டுள்ளது.

 

சிறப்பான செயல்திறனுக்காக என்எம்டிசி பணியாளர்களைப்  பாராட்டிய அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சுமித் தேப், “மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், இந்த வருடத்திற்கான நல்ல தொடக்கமாக இது அமைந்துள்ளது. வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை பட்ஜெட் வழங்கியுள்ளது,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794660

----



(Release ID: 1794738) Visitor Counter : 165