இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு சென்றிருந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த விமானப்படை வீரர் நிர்மல் ஜித் சிங் செக்கானுக்கு அஞ்சலி செலுத்தினார்

Posted On: 02 FEB 2022 12:54PM by PIB Chennai

தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு சென்றிருந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் மெச்சத் தகுந்த துணிவை வெளிப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்கப் போரில் உறுதியுடன் போராடி உயிர் நீத்த விமானப்படை வீரர் நிர்மல் ஜித் சிங் செக்கானுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த நினைவிடத்தில் ‘பரம் யோதா ஸ்தல் என பெயரிடப்பட்டுள்ள தீரச்செயல் புரிந்தோருக்கான வரிசையில் அமைக்கப்பட்டுள்ள, பரம் வீர் சக்ரா விருது பெற்ற மொத்தம் 21 பேரில் ஒருவரான விமானப்படை வீரரின் மார்பளவு சிலைக்கு டேபிள் டென்னிஸ் வீராங்கனை அஞ்சலி செலுத்தினார்.

“இந்த நினைவிடத்தில் போர் குறித்தும் நமது வீரர்கள் செய்த உச்ச நிலை தியாகம் குறித்தும்  பொறிக்கப்பட்டுள்ள பட்டயங்கள் எனக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஒரு இந்தியன் என்ற முறையில் எனது இதயம் இன்று நன்றியாலும், பெருமிதத்தாலும் நிறைந்துள்ளது” என்று ஒலிம்பிக் வீராங்கனை மனிகா பத்ரா கூறியுள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794659

*******


(Release ID: 1794699) Visitor Counter : 230