மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப தேசிய நிறுவனத்தின் தலைமை இயக்குனராக டாக்டர் மதன் மோகன் திரிபாதி பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 02 FEB 2022 12:24PM by PIB Chennai

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப தேசிய நிறுவனத்தின் தலைமை இயக்குனராக டாக்டர் மதன் மோகன் திரிபாதி திங்களன்று பொறுப்பேற்றார். இந்த நிறுவனம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமாகும்.

இந்தப் பணியில் சேர்வதற்கு முன் புதுதில்லியில் உள்ள தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக திரிபாதி பணியாற்றினார்.

1994-ல் (மத்திய அணுசக்தித் துறையின் கீழ்) காந்தி நகரில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானியாக இவர் பணியைத் தொடங்கினார். ஐந்தாண்டு காலத்திற்கு பல்வேறு ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டுத் திட்டங்களில் டாக்டர் மதன் மோகன் திரிபாதி பணியாற்றி உள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794652

 

***


(रिलीज़ आईडी: 1794689) आगंतुक पटल : 310
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Bengali , Punjabi , Kannada