சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

3.5 டன்னுக்கு குறைவான எடை கொண்ட பிஎஸ்- VI வாகனங்களுக்கு டீசல் எஞ்சினுக்கு பதிலாக சிஎன்ஜி/எல்பிஜி எஞ்சின்களைப் பொருத்தவும், சிஎன்ஜி, எல்பிஜி உபகரணங்களைப் பொருத்தவும் அனுமதிக்கும் வரைவு அறிக்கை வெளியீடு

प्रविष्टि तिथि: 29 JAN 2022 4:22PM by PIB Chennai

3.5 டன்னுக்கு குறைவான எடை கொண்ட பிஎஸ்- VI வாகனங்களுக்கு டீசல் எஞ்சினுக்கு பதிலாக சிஎன்ஜி/எல்பிஜி எஞ்சின்களைப் பொருத்தவும்சிஎன்ஜிஎல்பிஜி உபகரணங்களைப் பொருத்தவும் அனுமதிக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை 27-ம்தேதி வெளியிடப்பட்டது. தற்போது பிஎஸ்- IV உமிழ்வு விதிமுறைகளின் கீழ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி உள்ளது.

சிஎன்ஜி சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாக இருப்பதாலும்கார்பன் மோனாக்சைடுஹைட்ரோகார்பன் ஆகிய உமிழ்வு அளவைக் குறைப்பதாலும்பெட்ரோல்டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் புகை வெளியீடு குறைவாகவும் இருப்பதால்இந்த உபகரணத்தை பொருத்த இந்த அறிவிக்கை வகைசெய்கிறது.

வாகனப் போக்குவரத்து  தொடர்பாக  சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் இது வரைவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிவிக்கைக்கு 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ஆலோசனைகள்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

****


(रिलीज़ आईडी: 1793509) आगंतुक पटल : 273
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Marathi , English , Urdu , Bengali , Telugu