நிதி அமைச்சகம்
ஏர் இந்தியா பங்குவிலக்கல் செயல்பாடு நிறைவடைந்தது
Posted On:
27 JAN 2022 3:56PM by PIB Chennai
ஏர் இந்தியா பங்குவிற்பனைப் பரிவர்த்தனை இன்று நிறைவடைந்தது. ஒப்பந்த பங்குதாரரிடம் இருந்து ( டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாலஸ் நிறுவனம்) ரூ 2700 கோடியை அரசு பெற்றுக் கொண்டு, ஏர் இந்தியா மற்றும் ஏஐஎக்ஸ்எல்-லின் ரூ,15,300 கோடி கடனை வைத்துக் கொண்டுள்ளது. மேலும் ஏர் இந்தியாவின் பங்குகளை மாற்றி (ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏஐஎக்ஸ்எல் -ன் 100% பங்குகள் மற்றும் ஏஐஎஸ்ஏடிஏஎஸ்-ன் 50% பங்குகள்) வழங்கியுள்ளது.
ஏர் இந்தியா பங்குவிற்பனை நடவடிக்கையில், அதிக தொகை டெண்டர் கேட்ட டாலஸ் நிறுவனத்துக்கு, அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, 2021 அக்டோபர் 11-ந்தேதி ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. பங்கு கொள்முதல் உடன்படிக்கை 2021 அக்டோபர் 25-ந்தேதி கையெழுத்தாகியது. இதனைத் தொடர்ந்து பங்கு கொள்முதல் உடன்படிக்கையின் நிபந்தனைகள் பரஸ்பர திருப்திக்கு ஏற்ற வகையில் நிறைவேற்றப்பட்டன.
-----
(Release ID: 1792989)
Visitor Counter : 279