பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது
“நமது புதல்விகளின் சாதனைகளை நாம் கொண்டாடும்போது, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ சமூகத்தை கட்டமைப்பதற்கு பாலின பாகுபாட்டை குறைக்க உறுதி ஏற்போம்”: திருமதி ஸ்மிருதி இரானி
प्रविष्टि तिथि:
25 JAN 2022 2:48PM by PIB Chennai
2022 ஜனவரி 24 அன்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியது. பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், பல்வேறு துறைகளில் அவர்களின் சாதனைகளைக் கொண்டாடவும் நாடு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டின் கொவிட்-19 நிலைமை காரணமாக இந்த நிகழ்ச்சிகள் இணையம் வழியாக நடத்தப்பட்டன.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் யுனிசெஃப்-உடன் இணைந்து ‘கன்யா மஹோத்சவ்’ விழாவை கொண்டாடியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 பதின்பருவ இளம்பெண்களுடன் காணொலி காட்சி மூலம் அமைச்சர் திருமதி.ஸ்மிருதி சுபின் இரானி கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலும் டிஜிட்டல் இயக்கமும் ‘ஒவ்வொரு பெண் குழந்தையும் சிறப்பானதே’ என்பதை வலியுறுத்தின.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய திருமதி. இரானி, துணிச்சல், மனஉறுதி, நம்பிக்கை ஆகியவற்றில் தங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்குப் பங்கேற்ற பதின்பருவ இருபால் சிறார்களையும் வரவேற்றார். நாடு முழுவதிலுமிருந்து குழந்தைகளின் குரல்களை முன்னெடுத்து வருவதற்கு ஆதரவளித்த யுனிசெஃப் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த அவர், குழந்தைகள் எதிர்கொள்ளும் மனநல குறைபாடுகளை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துமாறும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சம்வாத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
குழந்தை திருமணத்தைத் தடுப்பதிலும் பதின்பருவத்தினருக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்துவதிலும் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதிலும் இந்தியாவின் உறுதிபாட்டையும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் யுனிசெஃப் தெற்காசிய இயக்குனர் ஜார்ஜ் லேரியா அட்ஜே பாராட்டினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792466
********
(रिलीज़ आईडी: 1792528)
आगंतुक पटल : 246