உள்துறை அமைச்சகம்
2022, குடியரசு தினத்தையொட்டி, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினருக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம்
प्रविष्टि तिथि:
25 JAN 2022 11:11AM by PIB Chennai
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, தீயைணைப்புத் துறையினர், சிவில் பாதுகாப்புப் படையினர் & ஊர்க்காவல் படையினருக்கு ஆண்டுதோறும் குடியரசுத்தலைவரின் தலைசிறந்த சேவைக்கான பதக்கம் மற்றும் குடியரசுத்தலைவரின் வீரதீர மற்றும் தகுதிமிக்க சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
2022 குடியரசு தினத்தையொட்டி, தீயணைப்பு சேவைக்கான பதக்கம் 42 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
இவர்களில், ஒருவருக்கு வீரதீரச் செயலுக்கான குடியரசுத் தலைவரின் தீயணைப்பு சேவைப் பதக்கமும், வீரதீரச் செயலுக்கான தீயணைப்பு சேவைப் பதக்கம் 2 பேருக்கும் வழங்கப்படுகிறது.
தலைசிறந்த தீயணைப்பு சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் 9 பேருக்கும், தகுதிமிக்க சேவைக்கான தீயணைப்பு சேவைக்கான பதக்கம் 30 பேருக்கும், அவர்களது மதிப்புமிக்க தலைசிறந்த மற்றும் தகுதிமிக்க சேவைக்காக வழங்கப்படுகிறது.
இது தவிர, 2022 குடியரசு தினத்தையொட்டி, 25 பணியாளர்கள்/ தன்னார்வலர்களுக்கும் ஊர்க்காவல் படை & சிவில் பாதுகாப்புப் பதக்கம் வழங்கப்பட உள்ளது. இவர்களில், 2 பேருக்கு தலைசிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் ஊர்க்காவல்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பதக்கமும், 23 பேருக்கு தகுதிமிக்க சேவைக்கான ஊர்க்காவல்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பதக்கமும் வழங்கப்பட உள்ளது.
தகுதிமிக்க சேவைக்கான தீயணைப்பு சேவைப் பதக்கம் பெற, தமிழ்நாட்டைச் சேர்ந்த
- திரு.குழந்தை உடையார் கோபால், நிலைய அலுவலர்
- திரு.ஆரோக்கியசாமி சிலுவைமாணிக்கம், நிலைய அலுவலர்
- திரு.முத்துதேவர் மணிகண்டன், முன்னோடி தீயணைப்பு வீரர்
- திரு.ரெங்கன் மருதை, தீயணைப்பு வாகன ஓட்டுனர்
- திரு.துரை பாஸ்கர், தீயணைப்பு வீரர்
ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தகுதிமிக்க சேவைக்கான ஊர்க்காவல்படை சிவில் பாதுகாப்பு பதக்கம் பெறுவதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த
- திரு.தனசேகர் கிருஷ்ணசாமி, ஏரியா கமாண்டர்(ஊர்க்காவல்படை)
- திரு.செல்வஜோதி பாலகுருநாதன், பிளாட்டூன் கமாண்டர் (ஊர்க்காவல்படை)
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792370
*****
(रिलीज़ आईडी: 1792519)
आगंतुक पटल : 372
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
हिन्दी
,
Telugu
,
Malayalam
,
Bengali
,
Manipuri
,
Urdu
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada