குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
வெற்றிக் கதை - உதயம் பதிவுடன் முன்னேறும் நிறுவனம்
Posted On:
24 JAN 2022 4:59PM by PIB Chennai
உதயம் பதிவு மூலம், நெக்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மதீம் ஜகிர்தார், நிதியுதவி மற்றும் அரசு டெண்டர்களின் பயன்களை பெறுவதற்கு, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் உதவியது. இவர் தனது நிறுவனம் மூலம் குழந்தைகளுக்கான புதுமையான கல்வி முறைகள் நாடுமுழுவதும் உள்ள குழந்தைகளை சென்றடைவதை உறுதி செய்ய கடுமையாக உழைத்தார். இவர் தனது பயணத்தில், பல தடைகளை சந்திக்க தொடங்கினார். இந்த தடைகள் எல்லாம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தால் அகற்றப்பட்டன. ‘‘உதயம் பதிவை பெற்றபின், முன்வைப்புத் தொகை விலக்கு, வருவாய் விலக்கு போன்ற பயன்களை தன்னால் பெற முடிந்தது. இது தனது நிறுவனம் முன்னோக்கி செல்ல உதவியது‘‘ என மதீம் ஜகிர்தார் கூறுகிறார். அவரது தயாரிப்புகள், நாட்டில் உள்ள ஏராளமான குழந்தைகளுக்கு பயன் அளிக்கின்றன.
********
(Release ID: 1792268)
Visitor Counter : 161