பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்முவில் இன்று இந்தியாவின் முதலாவது மாவட்ட சிறந்த நிர்வாக குறியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிடுகிறார்
Posted On:
22 JAN 2022 11:52AM by PIB Chennai
ஜம்மு & காஷ்மீர் அரசின் ஒத்துழைப்புடன், டிஏஆர்பிஜி தயாரித்துள்ள இந்தியாவின் முதலாவது மாவட்ட சிறந்த நிர்வாக குறியீட்டை, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா முன்னிலையில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிடுகிறார்.
ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக மாதிரியின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாவட்ட அளவிலான சிறந்த நிர்வாகத்துக்கு அடிப்படையாகக் கொள்ளும் அளவுக்கு இது இருக்கும்.
2021 டிசம்பர் 25-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்ட தேசிய சிறந்த நிர்வாக குறியீட்டில், ஜம்மு காஷ்மீர் 3.7 % வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. வர்த்தகம் மற்றும் தொழில், வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள், பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் போன்றவற்றிலும் சிறப்பான செயல்திறனைக் காண முடிந்தது.
இதன் அடிப்படையில் இந்த குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள இது வழிவகுக்கும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791747
****
(Release ID: 1791782)
Visitor Counter : 272