குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

முழுமையான விநியோகச் சங்கிலியை உருவாக்கும் திறன் ஒருங்கிணைந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உள்ளது: குறு, சிறு, நடுத்தர தொழில் துறை செயலாளர்

Posted On: 20 JAN 2022 10:31AM by PIB Chennai

குறைந்த செலவிலான உற்பத்தித் திறன் காரணமாக உலகளாவிய மதிப்பு சங்கிலியில் இந்தியப் பொறியியல் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படுவதற்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளதாக, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை செயலாளர் திரு.பி.பி.ஸ்வைன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மாநாட்டில் உரையாற்றிய திரு.ஸ்வைன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உயர் வளர்ச்சி விகிதத்தை அடைய, கடனுதவி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகிய இரண்டு மிக முக்கிய தலையீடுகள் அவசியம் என்றார். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் புரிவதை மேலும் எளிதாக்க உதவும் வகையில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் தமது அமைச்சகம் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடனுதவி கிடைக்கச் செய்வதற்கும், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளில் தேவையான பாதுகாப்பை வழங்கவும், தற்சார்பு அறிவிப்புகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் திரு.ஸ்வைன் தெரிவித்தார். நாட்டில் உதயம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள 67 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் 29 சதவீத நிறுவனங்கள் பொறியியல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791129

***************



(Release ID: 1791155) Visitor Counter : 211