இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தேசிய போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட்டார் மீராபாய்: வீரம் மற்றும் தியாகத்தை வெளிப்படுத்தும் நினைவிடத்தை ஒவ்வொரு இந்தியரும் பார்வையிட வலியுறுத்தல்

Posted On: 17 JAN 2022 2:07PM by PIB Chennai

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு தில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட்டார்.  

இதுகுறித்து அவர் கூறுகையில், வழக்கமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நான் தில்லியில் தங்கியிருப்பேன்.  ஆனால் இந்த முறை தேசிய போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட்டேன் என அவர் தெரிவித்தார்.  இது இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.  கடந்த 1947 ஆம் ஆண்டிலிருந்து இந்திய போர் வரலாற்றை இந்த நினைவிடம் தெரிவிக்கிறது. 

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க போர் கதைகளை தெரிவிக்கும் இந்த வளாகம் முழுவதையும் மீராபாய் பார்வையிட்டார்.  “சக்கர வியூக அமைப்பில் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சுவர்கள் இந்திய வீரர்களின் போர் கதைகளை வெண்கலச் சிற்பங்களில் அலங்கரிக்கின்றன.  இதை பார்த்து தான் வியந்தேன்” என மீராபாய் கூறியுள்ளார்.

இந்த நினைவிடத்தை ஒவ்வொரு இந்தியரும் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது பார்வையிட வேண்டும் என மீராபாய் கூறினார். 

அசோக சக்ரா விருது பெற்ற மேஜர் லைஸ் ராம் ஜோதின்சிங்குக்கும் மணிப்பூரைச் சேர்ந்த  மீராபாய் புகழாரம் சூட்டினார்.

***************



(Release ID: 1790488) Visitor Counter : 183