ஆயுஷ்

உலகெங்கிலும் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் சூரிய நமஸ்காரம் செய்தனர்.

Posted On: 14 JAN 2022 6:39PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படும் நிலையில், “ஆரோக்கியத்திற்காக சூரிய நமஸ்காரம்” எனும் நிகழ்ச்சியை ஆயுஷ் அமைச்சகம் இன்று நடத்தியது. உலகெங்கிலும் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தனர்.

 

ஆயுஷ் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் மற்றும் ஆயுஷ் இணை அமைச்சர் டாக்டர். முஞ்சப்பரா மகேந்திரபாய் காணொலி மூலம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

 

பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

தொடக்க உரையாற்றிய மத்திய அமைச்சர், மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சூரிய நமஸ்காரம் மேம்படுத்துகிறது என்றும், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், மனிதகுலத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் ஊக்குவிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

 

சூரிய நமஸ்காரம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் நிரூபித்ததாக டாக்டர். முஞ்சப்பரா கூறினார்.

 

ஆயுஷ் செயலர் மருத்துவர் ராஜேஷ் கோடேச்சா கூறுகையில், சூரிய நமஸ்காரம் உயிர் சக்திக்கானது என்றும், சூரிய சக்தியின் குணப்படுத்தும் சக்தியை மேம்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகம் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.

 

உலகம் முழுவதிலுமிருந்து பல முன்னணி யோகா ஆசிரியர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் இந்த நிகழ்வில் இணைந்து சூரிய நமஸ்காரம் செய்ததோடு, சூரிய நமஸ்காரம் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789910

                                                                                                ***************



(Release ID: 1789968) Visitor Counter : 160