சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் அண்மைச் செய்திகள்

Posted On: 13 JAN 2022 9:22AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 154.61  கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,17,531

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 3.08 சதவீதமாக உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 95.59 சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 84,825 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,47,15,361 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,47,417 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 13.11 சதவீதம் ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் 10.80 சதவீதம் ஆகும்

இதுவரை மொத்தம் 69.73 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, தில்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 28  மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 5,488 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 2,162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 1,367 பேருக்கும், ராஜஸ்தானில் 792, பேருக்கும், தொற்று ஏற்பட்டு மகாராஷ்டிராவில் 734 பேரும், ராஜஸ்தானில் 510  பேரும், குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 185.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789540       

------


(Release ID: 1789603) Visitor Counter : 208