தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

செய்திகளுக்கான டி.வி. நேயர்களின் தரமதிப்பீடு அளவை மீண்டும் தொடங்குகிறது ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில்(BARC)

Posted On: 12 JAN 2022 5:19PM by PIB Chennai

டிஆர்பி அறிக்கை மற்றும் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரையின் அடிப்படையில்,  ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில்(BARC)  அதன் செயல்முறைகள், நெறிமுறைகள், மேற்பார்வை முறை மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவற்றில் மாற்றங்களைத் மேற்கொண்டுள்ளது. வாரியத்தை மாற்றியமைப்பது மற்றும் தனி உறுப்பினர்களை  சேர்க்க தொழில்நுட்ப குழுவை அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை   ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தொடங்கியுள்ளது. ஒரு நிரந்தர மேற்பார்வை குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.  தரவுக்கான அணுகல் நெறிமுறைகள் புதுப்பிக்கப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, புதிய திட்டங்களை விளக்குவதற்கு சம்பந்தப்பட்ட தொகுதிகளை அணுகி, புதிய நெறிமுறைகளின்படி தரமதிப்பீடு வெளியீட்டை  தொடங்கத் தயாராக இருப்பதாக BARC சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்கூறியவற்றைக் கவனத்தில் கொண்டு, செய்தி மதிப்பீடுகளை உடனடியாக வெளியிடுமாறும், உண்மையான போக்குகளின் நியாயமான மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்திற்காக, மாதாந்திர முறையில்,  கடந்த மூன்று மாத தரவுகளை வெளியிடுமாறு ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சிலை,  தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கேட்டுக் கொண்டுள்ளது.  மாற்றியமைக்கப்பட்ட முறையின்படி, செய்திகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளின் அறிக்கையானது 'நான்கு வார சுழற்சி சராசரி கருத்தாக்கத்தில்' இருக்க வேண்டும்.

டிராய் மற்றும் டிஆர்பி  கமிட்டி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டபடி, டிஆர்பி  சேவைகளைப் பயன்படுத்துவதற்காக  நேயர்களின் தரவு (RPD) திறன்களை மேம்படுத்துவதை பரிசீலிக்க,  பிரசார் பாரதியின்  தலைமை செயல் அதிகாரி தலைமையில் செயற்குழு ஒன்றை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789392

*******

 (Release ID: 1789485) Visitor Counter : 202