பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
கியான் தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாக இளைஞர்களிடையே முதலீட்டு கல்வி மற்றும் நிதிசார்ந்த அறிவாற்றலை ஊக்குவிக்க, முதலீட்டுக் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிஆணையம் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
12 JAN 2022 2:33PM by PIB Chennai
புதுதில்லியில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர்களிடையே முதலீட்டு கல்வி மற்றும் நிதிசார்ந்த அறிவாற்றலை ஊக்குவிக்க, மத்திய பெருநிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் முதலீட்டுக் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிஆணையமும், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கியான் தர்ஷன் தொலைக்காட்சியின் தொலை-பாடம் நடத்தும் வசதியை பயன்படுத்தி, முதலீட்டுக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை கட்டாயமாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கியான் தர்ஷன் தொலைக்காட்சி இணைந்து செயல்படுவது, தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினரில் பெரும்பாலோரிடம் முதலீட்டுக் கல்வி மற்றும் விழிப்புணர்வு தகவலை பரப்ப உதவும். கல்வி போதனை தொடர்களுக்கான நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் குழுவில், ஐசிஏஐ, ஐசிஎஸ்ஐ தொழில் ரீதியான கல்வி நிறுவனங்களின் வல்லுநர்கள், முதலீட்டுக் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் உயரதிகாரிகள், மத்திய அரசின் பெருநிறுவனங்கள் துறை (Corporate Affairs) மற்றும் பிற கட்டுப்பாட்டு அமைப்புகளின் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள். 75 தொடர்களாக ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி 24x7 கியான் தர்ஷன் தொலைக்காட்சி அலைவரிசையில் நேரலை போதனைத் தொடராக அமையும். இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின பெருவிழா குறிக்கும் விதமாக, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய பெருநிறுவனங்கள் துறை செயலாளரும், முதலீட்டுக் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் அலுவல் வழி தலைவருமான திரு ராஜேஷ் வர்மா, மக்களுக்கு கல்வி புகட்டும் பொதுவான நோக்கத்துடன் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்திருப்பதாக கூறினார். இந்தியாவை தற்சார்பு, முன்னேற்றம் அடைந்த தேசமாக மாற்றும் நோக்கில், ஒட்டுமொத்த நாடும் 75 ஆவது சுதந்திர தின பெருவிழாவை கொண்டாடுகிறோம்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789346
***************
(Release ID: 1789361)
Visitor Counter : 204