அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சந்தை விலையை விட மிகவும் குறைந்தவிலையில் தூய்மையான குடிநீர் வழங்க, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவால் செயல்படும் ஐஐடி முன்னாள் மாணவர்களின் புதிய தொழிலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சி்ங் தொடங்கி வைத்தார்

Posted On: 11 JAN 2022 5:25PM by PIB Chennai

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தண்ணீரைத் தூய்மைப் படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவால் செயல்படும் ஐஐடி முன்னாள் மாணவர்களின் புதிய தொழிலை மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சி்ங் இன்று தொடங்கி வைத்தார் . சந்தை விலையை விட மிகவும் குறைந்தவிலையில் தூய்மையான குடிநீர் வழங்குவது இதன் நோக்கமாகும்.

 மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் சட்ட அந்தஸ்துள்ள அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்திற்கும் குருகிராமைச் சேர்ந்த முன்னாள் ஐஐடி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள ஸ்வஜல் குடிநீர் தனியார் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், திறமையும் ஆர்வமும் கொண்ட சிறிய சாத்தியமுள்ள புதிய தொழில்களுக்கு உதவி செய்ய தமது அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது என்றார். பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான 2024-க்குள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் வழங்குவது என்ற லட்சியத்தை இந்தியா அடைவதற்கு உதவி செய்ய இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துமாறு ஸ்வஜால் நிறுவனத்தின் இணை அமைப்பாளரும், தலைமை நிர்வாகியுமான டாக்டர் விபா திரிபாதியை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டிய சுமார் 14 கோடி குடும்பங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் தேசிய ஊரக குடிநீர் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் போன்ற முன் முயற்சிகளுக்கு அப்பால் தனியார் துறையினரும் நவீன தொழில்நுட்பங்களுடன் தீர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789136

***************

 



(Release ID: 1789161) Visitor Counter : 204