சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 152.89 கோடியைக் கடந்தது

Posted On: 11 JAN 2022 10:04AM by PIB Chennai

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 92 லட்சத்துக்கும் அதிகமாக (92,07,700) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 152.89 கோடியைக் (1,52,89,70,294) கடந்தது. 1,63,81,175 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 69,959 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,45,70,131 ஆக அதிகரித்துள்ளது.

  • தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 96.36 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8,21,446. ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 2.29 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15,79,928 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 69.31 கோடி கொவிட் பரிசோதனைகள் (69,31,55,280 ) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று 8.85 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 10.64 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789055

                                                                                                                                                                            ***************



(Release ID: 1789091) Visitor Counter : 214