பாதுகாப்பு அமைச்சகம்
நவீன நில அளவை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மூன்று ஆண்டுகளில் 17.78 லட்சம் ஏக்கர் பாதுபாப்பு துறை நிலங்களை பாதுகாப்பு அமைச்சகம் அளவை செய்துள்ளது
Posted On:
09 JAN 2022 10:23AM by PIB Chennai
பாதுகாப்பு துறை எஸ்டேட் அலுவலங்களின் ஆவணங்கள் படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமாக 17.99 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 1.61 லட்சம் ஏக்கர் நிலம் 62 கண்டோன்மென்ட் பகுதிகளில் உள்ளன. 16.38 லட்சம் ஏக்கர் கண்டோன்மென்டுகளுக்கு வெளியே, ஏராளமான பகுதிகளில் உள்ளன. இதில், 18,000 ஏக்கர் நிலம், மாநில அரசின் வாடகையிலோ, மற்ற அரசு துறைகளுக்கு மாற்றப்பட்டதால், ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டோ உள்ளன.
பாதுகாப்பு துறை நிலங்களைப் பாதுகாக்க தெளிவான எல்லைகள் அவசியமாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் உரிமையை பாதுகாக்கவும், நில ஆவணங்களை மேம்படுத்துவதுடன், ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் இது அவசியமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு எஸ்டேட் தலைமை இயக்குநரகம் 2018-ம் ஆண்டு அக்டோபரில் நில அளவை நடவடிக்கையை ஆரம்பித்தது.
கண்டோன்மென்டுகளுக்கு உள்ளே உள்ள 1.61 லட்சம் ஏக்கர், வெளியே உள்ள 16.17 லட்சம் ஏக்கர் ( மொத்தம் 17.78 லட்சம் ஏக்கர்) நிலங்கள் அளந்து சர்வே செய்து முடிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நடவடிக்கை சாதனையாக கருதப்படுகிறது. சுமார் 4900 இடங்களில் இந்த நிலம் விரிந்து பரந்துள்ளது. இந்த அளவை நாட்டின் மிகப்பெரும் அளவையாகும்.
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த அளவை நடைபெற்றுள்ளது. ட்ரோன் மூலம் படம் பிடித்தல், செயற்கைக்கோள் படம் போன்றவையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்.
****
(Release ID: 1788712)
Visitor Counter : 286