பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இ-நிர்வாகம் 2021 குறித்த 24-வது தேசிய கருத்தரங்கு ஐதராபாதில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

Posted On: 08 JAN 2022 4:39PM by PIB Chennai

தெலங்கானாவின் ஐதராபாதில் ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்ற இ-நிர்வாகம் 2021 குறித்த 24-வது தேசிய கருத்தரங்கு இன்று நிறைவடைந்தது. “இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில் டிஜிட்டல் நிர்வாகம்” என்பது இந்தக் கருத்தரங்கின் மையப் பொருளாகும். இரண்டு நாள் நடைபெற்ற அமர்வுகளில் ஆழ்ந்த விவாதத்திற்குப் பின் இ-நிர்வாகம் குறித்த ‘ஐதராபாத் பிரகடனம்’ ஏற்கப்பட்டது.

நேர்முகமாகவும், இணையவழியிலும் சுமார் 2,000 பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். 50-க்கும் அதிகமானோர் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இந்தக் கருத்தரங்கின் அமர்வுகள் அனைத்தும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதாகவும் குடிமக்கள் பயனடைய இ-நிர்வாக கருவிகளை பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தைக் கற்றறிவதாகவும் இருந்தன.

டிஜிட்டல் தளங்கள் மூலம் குடிமக்களையும், அரசையும் நெருக்கமாகக் கொண்டுவருவது, பெருந்தொற்று போன்ற பிரச்சனைகளை  எதிர்கொள்ள தொழில்நுட்ப தீர்வுகளுக்கு வலுவான அடிப்படைக் கட்டமைப்பை உறுதி செய்வது, குறிப்பிடத்தக்க சேவைகள் மூலம், மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயும் ஆரோக்கியமான போட்டியின் வழியாக நல்ல நிர்வாகத்தை உயர்நிலைக்கு  மேம்படுத்துவது, தடையில்லாத மக்கள் குறைதீர்ப்புக்கு சிபிகிராம்ஸ் (CPGRAMS)வுடன் அனைத்து  மாநில / மாவட்ட இணைப்பக்கங்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளில் மத்திய, மாநில அரசுகள்  ஒத்துழைத்து செயல்பட இந்த கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788564

***************

 
 
 


(Release ID: 1788592) Visitor Counter : 306