வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஸ்டார்ட்அப் இந்தியா புதுமைகள் வாரத்தை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஏற்பாடு செய்கிறது

Posted On: 07 JAN 2022 11:50AM by PIB Chennai

ஸ்டார்ட்அப் இந்தியா புதுமைகள் வாரத்தை 2022 ஜனவரி 10 முதல் 16 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஏற்பாடு செய்ய உள்ளது.

 

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துவதை இந்த ஒரு வார கால காணொலி கொண்டாட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விடுதலையின் அமிர்த பெருவிழா மற்றும் இந்தியா முழுவதும் தொழில்முனைவோரின் பரவல் மற்றும் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

சந்தை அணுகல் வாய்ப்புகளை மேம்படுத்துதல், தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடல், மாநிலங்களின் சிறந்த நடைமுறைகள், திறன் மேம்படுத்துதல், தொழில்நுட்ப கண்காட்சிகள், பெருநிறுவன இணைப்புகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் ஸ்டார்ட்அப் இந்தியா புதுமைகள் வாரத்தின் போது அமர்வுகள் நடைபெறும்.

 

உலகெங்கிலும் உள்ள சிறந்த கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் அனைத்து சூழலியல் அமைப்புகளைச் செயல்படுத்துபவர்களையும் இந்த நிகழ்ச்சி ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பங்குதாரர்களும் புதுமைகள் வாரத்தில் பங்குபெற https://www.startupindiainnovationweek.in/ என்ற தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு, திரு கௌதம் ஆனந்தை (மொபைல்: 9205241872, மின்னஞ்சல்: gautam.anand@investindia.org.in) தொடர்பு கொள்ளலாம்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788250

                                                                                                ***************

 



(Release ID: 1788462) Visitor Counter : 175