சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 ஒமைக்ரான் தற்போதைய நிலை
வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது
இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளும் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: 8-வது நாளன்று ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும்
திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் 2022 ஜனவரி 11-லிருந்து அமலுக்கு வரும்
Posted On:
07 JAN 2022 5:33PM by PIB Chennai
கொவிட்-19 வைரசின் தன்மை மாற்றம் அடைந்திருப்பது, சார்ஸ் – கோவ் -2 உருமாறி ஒமைக்ரான் என உருவாகியிருப்பது, உலக அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதான தகவல் ஆகியவற்றை அடுத்து 2022 ஜனவரி 6 அன்று வெளியான வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், திருத்தி அமைத்துள்ளது.
இதன்படி இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளும் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 8-வது நாளன்று ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும்
பரிசோதனை முடிவுகளை பயணிகள் ஏர் சுவிதா இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் (சம்பந்தப்பட்ட மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கள் கண்காணிக்க வேண்டும்.
திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் 2022 ஜனவரி 11-லிருந்து அமலுக்கு வரும்.
மேலும் விவரங்களுக்கு சுகாதார அமைச்சகத்தின் https://www.mohfw.gov.in/pdf/RevisedGuidelinesforInternationalArrivalsdated7thJanuary2022.pdf
என்ற இணையதளத்தைக் காணவும்.
***************
(Release ID: 1788426)
Visitor Counter : 212