ரெயில்வே அமைச்சகம்

2021-ல் ‘ஜீவன் ரக்ஷா திட்டத்தின்’ கீழ் 601 பேர் ஆர்பிஎஃப் துறையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்

Posted On: 06 JAN 2022 1:42PM by PIB Chennai

ரயில்வே சொத்துகள், பயணிகள் பகுதி மற்றும் பயணிகளின் பாதுகாப்புப் பொறுப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்),பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குவதற்காக 24 மணி நேரமும் உழைத்து வருகிறது.

இந்திய ரயில்வே தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சரக்கு போக்குவரத்து சேவையை வழங்கவும் இது உதவுகிறது. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ரயில்வே சொத்துகளுக்கு எதிரான குற்றங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள ரயில்வேயின் பெரும் சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆர்பிஎஃப் திறமையாக நிறைவேற்றி வருகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல்,  தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களின் போது பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதன் மூலம் தேசியப் பாதுகாப்பில் இது ஒரு முக்கிய பங்குதாரராக மாறியுள்ளது. 2021-ம் ஆண்டில் ஆர்பிஎஃப்-ன் சாதனைகளில் சில பின்வருமாறு:

* 2021-ம் ஆண்டில், "ஜீவன் ரக்ஷா" திட்டத்தின் கீழ் 601 நபர்கள் ஆர்பிஎஃப் பணியாளர்களால் காப்பாற்றப்பட்டனர்

* 522 ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்களுக்கு பாதுகாப்பு

* கடத்தல்காரர்களிடமிருந்து 630 பேர் மீட்கப்பட்டனர்

* "ஆபரேஷன் அமானத்"-ன் கீழ் 12,377 பயணிகளுக்குச் சொந்தமான 23 கோடிக்கும் அதிகமான பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டன.

* இடைத்தரகர்களுக்கு எதிரான நடவடிக்கையாக 4,100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்,

* முக்கிய ரயில் நிலையங்களில் 244 "மேரி சஹேலி" குழுக்கள் நிறுத்தப்பட்டன

* ரயில் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்வதில் ஆர்பிஎஃப் வெற்றியடைந்தது, இதன் மதிப்பு ரூ. 15.7 கோடி ஆகும். 2021-ம் ஆண்டில் 620 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787959



(Release ID: 1788103) Visitor Counter : 218