எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்துறையின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் டிசம்பர் மாதம் வரை ரூ.40395.34 கோடி மூலதன செலவு செய்துள்ளன

Posted On: 06 JAN 2022 10:06AM by PIB Chennai

மின்துறையின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், 2021-22 நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை, மூலதன செலவாக ரூ.40395.34 கோடி செலவிட்டுள்ளன. இது, 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொண்ட செலவை விட 47% அதிகம்.

இதன் மூலம், அமைச்சகத்தின் மூலதன செலவு செயல் திறன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் 2021-22 நிதியாண்டின் மூலதன செலவு இலக்கில் 80%, அதாவது ரூ.50,690.52 கோடியை கூட்டாக எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பவர்கிரிட் (90.6%), எஸ்ஜேவிஎன் (90.19%) என்டிபிசி (86.5%) மற்றும் டிஎச்டிசி (85.38%) ஆகியவை மின்துறைக்கு உட்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களாகும்.

மின் உற்பத்தித் திட்டங்களுக்கான மூலதன செலவின் வேகத்தை விரைவுபடுத்த, மின்துறை அமைச்சகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, திட்ட அமலாக்கத்தில் உள்ள மறைமுக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.


(Release ID: 1787954) Visitor Counter : 192