சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார தயார்நிலை 2-ம் கட்ட நிதியுதவி (இசிஆர்பி-2) திட்டத்தின் கீழ் மத்திய அரசு 26.14 சதவீத நிதியை மட்டும் விடுவித்தது என்பது தவறான தகவல்.

Posted On: 04 JAN 2022 6:29PM by PIB Chennai

கொவிட்-19  அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார தயார்நிலை 2-ம் கட்ட நிதியுதவி (இசிஆர்பி-2) திட்டத்தின் கீழ் மத்திய அரசு 26.14 சதவீத நிதியை மட்டும் விடுவித்தது என ஒரு செய்தி சேனல் சமீபத்தில் கூறியது.  மேலும், அந்த சேனல் 2021 நவம்பர் வரை மத்திய அரசு நிதியை விடுவித்தது எனவும், அதில் 60 சதவீத தொகையை மாநிலங்கள் பயன்படுத்தியதாகவும் கூறியது.  இது தவறான தகவல்.

இசிஆர்பி-2 திட்ட நிதியுதவி-ன் கீழ் ரூ.23,123 கோடி நிதிக்கு மத்திய அமைச்சரவை 2021 ஜூலை 8ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதில் ரூ.15,000  கோடி மத்திய அரசின் பங்கு, மாநில அரசின் பங்கு ரூ.8,123 கோடி. இதை கடந்த ஜூலை முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் ரூ.20,308.70 கோடி மாநிலங்களால் செலவழிக்கப்படவுள்ளது. இதில் ரூ.12,185.70 கோடி மத்திய அரசின் பங்கு. ரூ.8,123 கோடியை மாநில அரசுகள் வழங்க வேண்டும். மத்திய அரசு ரூ.6075.85 கோடியை, ( மத்திய பங்கில் 50 சதவீத தொகை)  தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 2021 ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் வழங்கிவிட்டது. இசிஆர்பி-2 திட்டத்தின் கீழ் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்  இதுவரை ரூ.1,679.05 கோடியை செலவழித்துள்ளன.  இவற்றின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787464

***************



(Release ID: 1787523) Visitor Counter : 158