பாதுகாப்பு அமைச்சகம்

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்பனா சாவ்லா ஆராய்ச்சி மையத்தை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 03 JAN 2022 2:01PM by PIB Chennai

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்பனா சாவ்லா ஆராய்ச்சி மையத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஜனவரி 3, 2022 அன்று தொடங்கி வைத்தார்.  முப்படைகளையும் சேர்ந்த வீரர்களின் குழந்தைகளுக்கான ரூ.10 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 

     நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், இந்த ஆராய்ச்சி மையம் நாட்டின் விண்வெளித் துறையை வலுப்படுத்துவதற்கான மிக முக்கிய நடவடிக்கை என்றார்.  இதுபோன்ற முயற்சிகளால்தான் இந்தியா வருங்கால தொழில்நுட்பங்களில் முன்னோடியாக திகழ முடியும் என்றும் தெரிவித்தார். 

     இந்த மையம், இந்தியாவில் பிறந்த விண்வெளி வீராங்கனையான காலஞ்சென்ற கல்பனா சாவ்லாவைப் போன்று, வெற்றியின் புதிய உச்சத்தை எட்டும் என்றும் அவர்  நம்பிக்கை தெரிவித்தார். 

     நட்சத்திரங்களையும், கிரகங்களையும் எட்டுவதற்கான ஒளிவட்டம் உங்களது கண்களில்  காணப்பட்டால்தான் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.   நீங்கள் அனைவரும் வெவ்வேறு கிரகங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்வீர்களேயானால், உங்களில் ஒருவர் ஆர்யபட்டா, விக்ரம்சாராபாய், சதீஷ் தவான் மற்றும் கல்பனா சாவ்லா போன்று உருவாகலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவை அறிவாற்றல் மிக்க பொருளாதார நாடாக மாற்றுவதற்கு அரசு-தனியார் துறையினரிடையே நீண்டகால ஒத்துழைப்பு தேவை என்று குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம் என்றும் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787104

***************(Release ID: 1787131) Visitor Counter : 274