பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ தின அணிவகுப்பு 2022

Posted On: 03 JAN 2022 10:13AM by PIB Chennai

ராணுவ தின அணிவகுப்பு 15 ஜனவரி 2022 அன்று கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும்.  அத்துடன், குடியரசு தின அணிவகுப்பு மற்றும் பாசறை திரும்புதல் நிகழ்ச்சிக் குறித்த செய்தியாளர் சந்திப்பும், 23 ஜனவரி 2022 அன்று நடைபெறும்.  பத்திரிகையாளர் சந்திப்புக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

விருப்பமுள்ள ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு அனுமதி பெறுவதற்காக கீழ்காணும் விவரங்களை armydayparade2022[at]gmail[dot]com என்ற மின்னஞ்சலுக்கு 5 ஜனவரி 2022-க்குள் அனுப்பி வைக்கவும்:-

  1. முழுப் பெயர்
  2. பிஐபி / அடையாள அட்டை எண்
  3. ஸ்கேன் செய்யப்பட்ட அடையாள அட்டையின் புகைப்படம்
  4. ஊடக நிறுவனத்தின் பெயர்
  5. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  6. விண்ணப்பிப்பது: ராணுவ தின அணிவகுப்பு / பத்திரிகையாளர் சந்திப்பு / இரண்டிற்கும்

 

சந்தேகம் ஏதும் இருப்பின், 011-23019659 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம். 05 ஜனவரி 2022 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

***************


(Release ID: 1787100) Visitor Counter : 254