நிதி அமைச்சகம்
2021 டிசம்பர் 31 நிலவரப்படி வருமான வரித்துறையின் புதிய இ- ஃபைலிங் தளம் மூலம் 5.89 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்.
Posted On:
01 JAN 2022 2:40PM by PIB Chennai
வருமான வரி தாக்கலுக்கு நீட்டிக்கப்பட்ட தேதியான 31.12.2021 நிலவரப்படி, வருமான வரித்துறையின் புதிய இ- ஃபைலிங் தளத்தின் மூலம், சுமார் 5.89 கோடி வருமான வரி கணக்குகள் (ஐடிஆர்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இத்தளத்தை எளிமையாக அணுக உதவும் வகையில், 16,850 வரி செலுத்துவோர் அழைப்புகள், 1,467 உரையாடல்கள் ஆகியவற்றுக்கு உதவி மையம் பதில் அளித்துள்ளது. அதிகாரப்பூர்வ டுவிட்டர் மூலமும், வரி செலுத்துவோருக்கு உதவப்பட்டது. 2021 டிசம்பர் 31 அன்று மட்டும் 230-க்கும் மேற்பட்ட டுவிட்டர்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31 நிலவரப்படி, 2021-22 மதிப்பீட்டு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட 5.89 கோடி ஐடிஆரில், 49.6% (2.92 கோடி) ஐடிஆர்-1, 9.3% (54.8 லட்சம்) ஐடிஆர்-2, 12.1% ( 71.05 லட்சம்) ஐடிஆர்-3, 27.2% ( 1.60 கோடி) ஐடிஆர்-4 ஆகும்.
2020-21-ம் மதிப்பீட்டு ஆண்டு நீட்டிக்கப்பட்ட கடைசி நாளான ஜனவரி 10, 2021 வரை தாக்கலான ஐடிஆர்கள் 5.95 கோடி. கடைசி நாளில் மட்டும் 31.05 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டின் கடைசி நாளில் 46.11 லட்சம் ஐடிஆர்கள் தாக்கலாகியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786783
****
(Release ID: 1786821)
Visitor Counter : 232