உள்துறை அமைச்சகம்
2022 ஆம் ஆண்டின் முதல் நாளில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட பயனாளி விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.20,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டதற்காக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு. அமித் ஷா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
प्रविष्टि तिथि:
01 JAN 2022 4:09PM by PIB Chennai
2022 ஆம் ஆண்டின் முதல் நாளில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட பயனாளி விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.20,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டதற்காக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு.அமித் ஷா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்
“விவசாயிகள் வளர்ச்சியடையாமல் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமில்லை, கடந்த 7 ஆண்டுகளாக விவசாயிகள் தன்னிறைவு அடைய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவான மோடி அரசை நாடு கண்டு வருகிறது. பிரதமரின் கிசான் திட்டம், விவசாயத்தின் மிக நெருக்கடியான நேரத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்து, அவர்களை கடனில் இருந்து விடுவிப்பதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.”, என்று மத்திய உள்துறை அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
****
(रिलीज़ आईडी: 1786817)
आगंतुक पटल : 390