பாதுகாப்பு அமைச்சகம்

மத்தியப்பிரதேசத்தின் மோவ்-ல் இந்திய ராணுவம் குவான்டம் சோதனைக்கூடத்தை நிறுவியுள்ளது

Posted On: 29 DEC 2021 12:18PM by PIB Chennai

மத்தியப்பிரதேசத்தின் மோவ்-ல் உள்ள தொலைத் தகவல் தொடர்பு பொறியியலுக்கான  ராணுவக் கல்லூரியில்  தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்தின் உதவியுடன் இந்திய ராணுவம் அண்மையில் குவான்டம் சோதனைக்கூடத்தை நிறுவியுள்ளது. மோவ் பகுதிக்கு ராணுவ தலைமை தளபதி ஜென்ரல் எம் எம் நரவானே வருகை தந்த போது,  இதுபற்றி அவரிடம் விவரிக்கப்பட்டது. 

இதே நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மையத்தையும், இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.  குவான்டம் தொழில்நுட்பத்தில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, அடுத்த தலைமுறை தகவல் தொடர்புக்கு பாய்ச்சல் வேகத்தில் உதவும். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786012

************(Release ID: 1786078) Visitor Counter : 268