பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோவாவில், கோவா விடுதலை தினத்தை குறித்தும் கொண்டாட்ட நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 DEC 2021 7:01PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

கோவாவின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை அவர்கள், கோவாவின் ஆற்றல்மிக்க முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள், துணை முதலமைச்சர்கள் சந்திரகாந்த் கவ்லேக்கர் அவர்கள், மனோஜ் ஆஜ்காவோங்கர் அவர்கள், மத்திய அமைச்சரவையின் எனது சகா ஸ்ரீபத் நாயக் அவர்கள், கோவா சட்டப்பேரவை தலைவர் ராஜேஷ் பட்னேக்கர் அவர்கள், கோவா அரசின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், கோவாவின் சகோதர, சகோதரிகள் பங்கேற்றுள்ளனர்.

நண்பர்களே,

கோவா இன்று தனது விடுதலையின் வைர விழாவை மட்டும் கொண்டாடவில்லை.அதன் 60 ஆண்டுகால பயணத்தின் நினைவுகளும் நம்முன்னால் உள்ளன. போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் சகாப்தமும் நம்முன்னால் உள்ளன. கோவாவின் லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பின் விளைவாக மிக குறுகிய காலத்தில் நீண்ட தொலைவில் நாம் கடக்க முடிந்துள்ளது. பெருமைப்படுவதற்கு நிறைய இருக்கும் போது எதிர்காலத்திற்கான புதிய தீர்மானங்களும் தானாகவே வந்துவிடும். புதிய கனவுகள் வடிவம் பெற தொடங்கியுள்ளன. கோவாவின் விடுதலை வைர விழா கொண்டாடப்படும் தருணத்தில் சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவும் கொண்டாடப்படுவது மற்றொரு மகிழ்ச்சியான ஒருங்கிணைப்பாகும். எனவே கோவாவின் கனவுகளும், தீர்மானங்களும்  தேசத்திற்கு இன்று சக்தியை தருகின்றன.

 நண்பர்களே,

இங்கு வருவதற்கு முன் ஆசாத் திடலில் ஷாஹீத் நினைவிடத்தில்  தியாகிகளுக்கு  அஞ்சலி செலுத்தும் வாய்ப்பையும்  நான் பெற்றிருந்தேன். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் மீராமரில் படகுகள் அணிவகுப்பையும், விமானங்கள் அணிவகுப்பையும் நான் பார்வையிட்டேன். இங்கேயும் “ஆபரேஷன் விஜய்” நாயகர்களை கௌரவப்படுத்தும் வாய்ப்பை நான் பெற்றேன். கோவா இன்று  ஏராளமான வாய்ப்புகளையும்,  வியப்புக்குரிய அனுபவங்களையும் தந்துள்ளது. இதுவே உயிரோட்டமான துடிப்புள்ள கோவாவின் தன்மையாகும். இந்த அன்புக்காகவும், சொந்தம் கொண்டாடுவதற்காகவும் கோவாவின் மக்களுக்கு  எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கோவாவின் விடுதலைக்காக அனைவரும் இணைந்து போராடியுள்ளனர். அந்நிய ஆட்சியாளர்களை எதிர்த்த பி்ன்ட்டோ கிளர்ச்சி உள்ளூர் கிறிஸ்தவர்களால் தலைமை தாங்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் அடையாளமாகும். மனித குலத்திற்கு சேவை செய்வதில் இங்கு எல்லோரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியாவின் ஒற்றுமையையும், பன்முக அடையாளத்தையும் ஒட்டுமொத்த உலகமும் பாராட்டுகிறது.  சிறிது காலத்திற்கு முன் நான் இத்தாலிக்கும், வாட்டிகன் நகருக்கும் சென்றிருந்தேன். அங்கு போப்பாண்டவர் பிரான்சிசை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். இந்தியாவை பற்றிய அவரது அணுகுமுறை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.  இந்தியாவுக்கு வருகை தருமாறு அவருக்கு நான் அழைப்பு விடுத்தேன். எனது அழைப்புக்கு பின் அவர் என்ன கூறினார் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். “இது நீங்கள் எனக்கு வழங்கியுள்ள மகத்தான பரிசாகும்” என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் கூறினார். இதுதான் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நமது துடிப்புமிக்க ஜனநாயகத்தின் மீதான நேசமாகும்.

நண்பர்களே,

கோவாவின் சாதனைகளை நான் காணும் போது எனது நெருங்கிய நண்பர் மனோகர் பாரிக்கர் அவர்களை நான் நினைத்து பார்க்கிறேன். கோவாவை அவர் வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றது மட்டுமின்றி கோவாவின் பலத்தையும் விரிவுபடுத்தினார்.  கோவாவின் குணாம்சம், பெருந்தன்மை, திறமை, கடின உழைப்பு மக்கள் ஆகியோரை மனோகர் அவர்களிடம் நாடு கண்டது. ஒருவர் தனது மாநிலத்திற்கும், மக்களுக்கும் இறுதி மூச்சுவரை  அர்ப்பணிப்போடு எவ்வாறு இருக்க முடியும் என்பதை அவர்கள் வாழ்க்கையில் நாம் கண்டோம். கோவாவின்  மகத்தான புதல்வரும், எனது சிறந்த நண்பருமான மனோகர் அவர்களுக்குத் தலைவணங்க இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

 நண்பர்களே,

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவி்ன் 100 ஆண்டுகளுக்கான புதிய தீர்மானங்களை நாடு உருவாக்கியிருக்கும் நிலையில், கோவா தனது விடுதலையின் 75 ஆண்டுகளை நிறைவு செய்வதற்கான புதிய தீர்மானங்களையும், புதிய இலக்குகளையும் நிர்ணயிக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். கோவாவில் இது தொடர வேண்டும். இடையில் நிறுத்தக் கூடாது. வேகம் குறைவதற்கும் விட்டுவிடக் கூடாது.

உங்கள் அனைவருக்கும் நன்றி! பாரத் மாதா கி ஜே!, பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே!.

**********


(Release ID: 1784854) Visitor Counter : 193