குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
24 DEC 2021 3:29PM by PIB Chennai
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
“இயேசுபிரான் அவதரித்ததைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் நன்னாளில், இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
கிறிஸ்துமஸ், அன்பு, கருணை, மன்னிப்பு ஆகியவற்றின் நன்மதிப்புகள் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பண்டிகையாகும். இயேசுபிரானின் பிறப்பை நாம் கொண்டாடும் வேளையில், அவர் கடைப்பிடித்த நன்மதிப்புகளை நாமும் போற்றுவோம். வாய்ப்புக் குறைவானவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவதுடன், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் அடித்தளத்தைப் பின்பற்றி சிறந்த உலகைப் படைக்க நம்மால் இயன்ற அளவு பாடுபடுவோம்.
இந்த கிறிஸ்துமஸ் நன்னாள், நமது வாழ்வில், அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும்”.
------
(रिलीज़ आईडी: 1784846)
आगंतुक पटल : 264