ஜல்சக்தி அமைச்சகம்
உத்தராகண்டில் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ.164.03 கோடி குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஒப்புதல்
Posted On:
24 DEC 2021 12:56PM by PIB Chennai
உத்தராகண்டில் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ.164.03 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு, மாநில அளவிலான திட்ட அனுமதி குழுவின் 23.12.20201 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 8 குடிநீர் திட்டங்கள், பல கிராமங்களுக்கு பயன் அளிக்கக் கூடிய திட்டங்களாகும். கிராமப்புறங்களில் உள்ள 9,200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
டேராடூன், நைனிடால், உத்தரகாசி, அல்மோரா, பாகேஸ்வர், மாவட்டங்களில் உள்ள 140 கிராமங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையும், கோடைக்காலத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் இந்த கிராமங்களின் குடிநீர் பிரச்சினைக்கு டிசம்பர் 2022-க்குள் தீர்வு காணப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784786
-------
(Release ID: 1784840)