சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஆக்ஸிஜன் மேற்பார்வை திட்டத்தை டாக்டர் பாரதி பிரவீன் பவார் தொடங்கி வைத்தார்

Posted On: 22 DEC 2021 12:00PM by PIB Chennai

உயிர்காக்கும் பொது சுகாதாரப் பொருள் என்ற நிலையில், மருத்துவ ஆக்ஸிஜனின் பங்களிப்பையும், மருத்துவ ஆக்ஸிஜனைக் கையாளுவதில் சுகாதாரப் பணியாளர்களின் திறனை அதிகரிப்பதன் அவசியத்தையும் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய ஆக்ஸிஜன் மேற்பார்வை திட்டத்தைப் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இன்று தொடங்கி வைத்தார்.

மருத்துவ ஆக்ஸிஜன் வீணாவதைத் தவிர்க்கவும், சீரான பயன்பாட்டை  உறுதி செய்யவும் தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் ஆக்ஸிஜனைக் கையாள்வதில் சுகாதாரப் பணியாளர்களை ஈடுபடுத்துவது, அவர்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாக கொண்டது இந்தத் திட்டம்.

நாடுமுழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு “ஆக்ஸிஜன் மேற்பார்வையாளரை” கண்டறிவது மற்றும் பயிற்சி அளிப்பதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.  பயிற்சிப் பெற்ற ஊழியர்கள் ஆக்ஸிஜனைக் கொண்டு சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சிக்கு பொறுப்பானவர்களாக இருப்பார்கள்.   ஆக்ஸிஜன் விநியோகத்தை தணிக்கை செய்வதிலும் சிரமமான சூழ்நிலையை சமாளிக்க  தயார் நிலையில் இருப்பதிலும் இவர்கள் கவனம் செலுத்துவார்கள். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பவார், “கொவிட் 19-க்கு மட்டுமின்றி பல நோய்களின் சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது மட்டுமின்றி, உயிர்காப்பதும் ஆகும்” என்றார்.  மிகவும் அளவான உற்பத்தியுள்ள ஆக்ஸிஜனை வீணாக்காமல் தவிர்ப்பது அல்லது அதிகம் பயன்படுத்தாமல் தவிர்ப்பது ஆகியவற்றில் பங்கேற்பாளர்களுக்கும் இந்த திட்டம் பயிற்சி அளிக்கும் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நித்தி ஆயோகின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், சுகாதாரத் துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784112

•••••••••••••


(Release ID: 1784243) Visitor Counter : 248