ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு குறித்து வெளியான செய்திக்கு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் விளக்கம்

प्रविष्टि तिथि: 21 DEC 2021 10:52AM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரங்கள், இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவானது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தேவையின் அடிப்படையிலான திட்டம் & இது போன்ற ஒப்பீடு சரியானதல்ல என்று விளக்கம் அளிக்கப்படுகிறது

பயனாளிகளின் தேவைக்கு ஏற்ப நடப்பு நிதியாண்டில் இதுவரை 261 கோடிக்கும் மேற்பட்ட மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மொத்தம் 175 கோடிக்கும் மேற்பட்ட மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 276 கோடி மனித வேலை நாட்களும், நடப்பு நிதியாண்டின் இதே காலத்தில் 255 கோடிக்கும் மேற்பட்ட மனித வேலை நாட்களும் உருவாக்கப்பட்டது.  

புள்ளி விவரங்களை பதிவு செய்ய 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, டிசம்பர் மாதத்திற்கான முழு புள்ளி விவரங்களும் அடுத்த மாதத்தின் பத்து நாட்களில் தான் கிடைக்கும். எனவே, முதல் 17 நாட்களுக்கான புள்ளி விவரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒப்பீடுகளில் சிறிய வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.

முந்தைய நிதியாண்டின் பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட நடப்பு நிதியாண்டிற்கான ஒதுக்கீடு 18%-க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.74,388 கோடிக்கும் மேற்பட்ட நிதி விடுவிக்கப்பட்டுள்ளதுகூடுதல் நிதி தேவைப்படும் போது அதனை விடுவிக்குமாறு நிதியமைச்சகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   அண்மையில், மத்திய நிதியமைச்சகம் இத்திட்டத்திற்கான இடைக்கால நடவடிக்கையாக கூடுதலாக ரூ.10,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783719

--------


(रिलीज़ आईडी: 1783949) आगंतुक पटल : 634
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu