பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

திறந்தவெளி ஏக்கர் உரிமம் திட்ட ஏலத்தின் ஏழாம் சுற்றை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தொடங்கியது

Posted On: 21 DEC 2021 10:54AM by PIB Chennai

ஆய்வுக்கான அதன் தீவிர செயல்திட்டம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவைக் கடைப்பிடிப்பதன் தொடர்ச்சியாக, திறந்தவெளி ஏக்கர் உரிமம்,  திட்டத்தின் சர்வதேச போட்டி ஏலத்திற்கான ஏழாம் சுற்றை அரசு தொடங்கியுள்ளது. 
இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 15, 2022 அன்று 12 மணி வரை பிரத்யேக மின்-ஏல இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். மார்ச் 2022 இறுதிக்குள் ஒப்பந்தங்கள் வழங்கி முடிக்கப்படும். இதன் மூலம் கூடுதலாக 15,766 சதுர கி.மீ. நிலப்பரப்பு ஆய்வுக்குள் கொண்டுவரப்படும். மொத்த பரப்பளவு 207,692 சதுர கி.மீ ஆக அதிகரிக்கப்படும். 
ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (ஹெல்ப்) மார்ச் 2016-ல் அங்கீகரிக்கப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், ஆய்வு மற்றும் உற்பத்தி செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்குமான உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையில் சீர்திருத்தங்களை பிப்ரவரி 2019-ல் அரசு அறிவித்தது. 
இதன் கவனம் 'வருவாய்' என்பதிலிருந்து 'உற்பத்தி அதிகரிப்புக்கு' மாற்றப்பட்டது. அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிப்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது.
30 மார்ச் 2016 அன்று ஹெல்ப் தொடங்கப்பட்டதிலிருந்து, 105 ஆய்வு மற்றும் உற்பத்தி தொகுதிகளுக்கு ஐந்து சுற்று ஏலம் நிறைவடைந்துள்ளது; ஆறாவது சுற்றின் கீழ் 21 தொகுதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 126 தொகுதிகள் சுமார் 191,926 சதுர கி.மீ. பரப்பளவு 18 வண்டல் படுகைகளில் பரவியுள்ளது. 
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783720

   
******

 



(Release ID: 1783833) Visitor Counter : 201