பிரதமர் அலுவலகம்
துணிகர மூலதனம் மற்றும் தனியார் பங்கு நிறுவன பிரதிநிதிகளுடன் வட்ட மேஜை கலந்துரையாடல் நடத்திய பிரதமர்
प्रविष्टि तिथि:
17 DEC 2021 8:24PM by PIB Chennai
துணிகர மூலதனம் மற்றும் தனியார் பங்கு நிறுவன பிரதிநிதிகளுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி, லோக் கல்யாண் மார்கில் 17.12.2021 அன்று வட்டமேஜை கலந்துரையாடல் நடத்தினார்.
நாட்டின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 7 ஆண்டுகளில், அரசு இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மேலும் அதிக மூலதனத்தை ஈர்க்கவும், நாட்டில் சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்தும் பிரதமர் ஆலோசனை கோரினார். கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் தெரிவித்த நடைமுறை சாத்தியமான ஆலோசனைகளுக்கு பாராட்டுத் தெரிவித்த அவர், கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சீர்திருத்தங்களை கொண்டு வரவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பெருந்திட்டம் போன்ற அம்சங்கள் குறித்தும் அவர் விவாதித்தார். இந்தியாவில் அடிமட்ட அளவில் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புகள் பற்றி குறிப்பிட்ட அவர், புதிதாக தொழில் தொடங்குவதற்கான சூழலை ஊக்குவிப்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782820
**************
(रिलीज़ आईडी: 1783473)
आगंतुक पटल : 559
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam