எரிசக்தி அமைச்சகம்
மாநிலங்களுடன் ஆய்வு, திட்டமிடுதல் மற்றும் கண்காணிப்பு கூட்டத்திற்கு மத்திய மின்சாரம் மற்றும் புதிப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறை அமைச்சர் தலைமை வகித்தார்
Posted On:
18 DEC 2021 11:46AM by PIB Chennai
மத்திய மின்சாரம், புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங், மாநிலங்களின் மின்சாரத்துறை கூடுதல் தலைமைச் செயலர்கள், முதன்மை செயலர்கள், மத்திய பொதுத்துறை மின் நிறுவனங்களின் தலைவர்கள் /நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்ட ஆய்வு, திட்டமிடுதல் மற்றும் கண்காணிப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மின்சாரத் துறை இணையமைச்சர் திரு கிருஷன் பால் குர்ஜார், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு பகவந்த் குபா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திரு ஆர்.கே.சிங் தமது தொடக்க உரையில், நடப்பு அரசு எரிசக்தி துறையை நெடிய முன்னேற்றத்துக்கு கொண்டு வந்துள்ளதாகக் கூறினார். நாடு தற்போது மின்மிகை நாடாக மாறியுள்ளது; நாடு முழுவதும் ஒரே தொகுப்பில் இணைக்கப்பட்ட து, மின் விநியோக முறை வலுப்படுத்தப்பட்டது ஆகிய நடவடிக்கைகள் கிராமப்புறங்களில் 22 மணி நேரத்துக்கும், நகர்ப்புறங்களில் 23.5 மணி நேரத்துக்கும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதே அடுத்த நடவடிக்கை என்று அவர் உறுதியளித்தார்.
மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்வது இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை என்று கூறிய அமைச்சர், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதே நமது முக்கிய நோக்கம் என்றார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமை எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பிரதம மந்திரி- கேயுஎஸ்யுஎம் திட்டம், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்கி அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782946
****************
(Release ID: 1782973)
Visitor Counter : 174