பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு

இந்தியாவில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலை குறித்த அறிக்கை : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியீடு

Posted On: 16 DEC 2021 2:15PM by PIB Chennai

இந்தியாவில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு  நிலை குறித்த அறிக்கையை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டது. போட்டிக்கழகம் தயாரித்திருந்த அறிக்கையை குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆரம்பகாலக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. தேசிய கல்விக் கொள்கை போன்ற நன்கு திட்டமிடப்பட்ட ஆரம்பகாலத் தலையீடுகள், நிபுன் பாரத் வழிகாட்டுதல்கள் போன்றவற்றின் பங்கையும் இது எடுத்துரைக்கிறது. இவை நீண்டகால மேம்படுத்தப்பட்ட கற்றல் பலன்களுக்கு வழி வகுக்கிறது.  

தரமான குழந்தைப் பருவக் கல்வியைப் பெறுவது அனைத்துக் குழந்தைகளின் அடிப்படை உரிமை, சமூகப் பொருளாதார பின்னணியில் குழந்தைகளின் ஆரம்பகாலத் தேவைகள், அவர்கள் சந்திக்கும் தொழில்நுட்ப இடையூறுகள், புரிந்து கொள்ளப்பட வேண்டும்,  இது குறித்த குழு விவாத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுத் தலைவர் டாக்டர் விவேக் தேப்ராய் கூறுகையில், நேர்மறையான விஷயங்களுக்கு கல்வி வழிவகுக்கிறது. குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் தரமான கல்வி அளிப்பது மிக முக்கியம். எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பெறுவதில் மாநிலங்களிடையே தற்போது நிலவும் வேறுபாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ஒரு குழந்தை திடமான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது அடிப்படையான படிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறமைகளைக் குறிக்கிறது.  பள்ளியில் படிக்கும் காலத்தில் அடிப்படைக் கல்வியில் குழந்தைகள் பின்தங்கியிருப்பது, அவர்களின் கற்றல் விஷயத்தில் எதிர்மறையான  தாக்கங்களை ஏற்படுத்தும். அடிப்படைக் கல்வி விஷயத்தில் நிலவும் பிரச்சினைகளுடன் தற்போதுள்ள பெருந்தொற்று சூழலும் குழந்தையின் ஒட்டுமொத்தக் கல்வியில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. அதனால் அடிப்படைக் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துவது தற்போதையத் தேவை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782174

-----(Release ID: 1782390) Visitor Counter : 206