சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஒரே தேசம், ஒரே மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்.
Posted On:
15 DEC 2021 1:39PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை உறுதி செய்வதற்காக அதன் வடிவத்தை மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் கீழ் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2021 ஜூன் 14 தேதியிட்ட அறிவிப்பு மூலம் முறைப்படுத்தியது.
மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் 115(7)-ம் விதிமுறையின் கீழ், “மோட்டார் வாகனம் முதலில் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு காலாவதியான பிறகு, அத்தகைய ஒவ்வொரு வாகனமும் மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகமையால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் “மாசு கட்டுப்பாட்டில் உள்ள” சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும்.”
மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் தரவுகளை வாஹன் தரவுதளத்தில் இணைப்பது தொடர்பான அறிவிப்பை 2018 ஜூன் 6 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டது.
மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 ஆகியவற்றின் விதிகளை அமல்படுத்துவது அந்தந்த மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களின் கீழ் வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781652
*************
(Release ID: 1781950)
Visitor Counter : 207