பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

2021-26-க்கான பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட அமலாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

மாநிலங்களுக்கான மத்திய உதவி ரூ.37,454 கோடி உட்பட ரூ.93,068 கோடி ஒதுக்கீடு

Posted On: 15 DEC 2021 3:54PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ரூ.93,068 கோடி நிதி ஒதுக்கீட்டுடன், 2021-26-க்கான பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட அமலாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவியாக ரூ.37,454 கோடி வழங்கவும், அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் வேளாண் பாசனத் திட்ட காலத்தில், 2016-21 பாசன மேம்பாட்டிற்காக மத்திய அரசால் கடன் வழங்க ரூ.20,434.56 கோடிக்கும் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறப்புத் திட்டமான விரைவுப்படுத்தப்பட்ட பாசனப்பயன் திட்டம் நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.  இந்தத் திட்டத்தின் கீழ் 2021-26 காலத்தில் கூடுதலாக 13.88 லட்சம் ஹெக்டேர் பாசன வசதி பெறும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781719 

-----­(Release ID: 1781896) Visitor Counter : 285