மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

குற்ற விஷயங்களில் பரஸ்பரம் சட்ட உதவி தொடர்பாக இந்தியா – போலந்து இடையேயான உடன்பாட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 15 DEC 2021 4:05PM by PIB Chennai

குற்ற விஷயங்களில் பரஸ்பரம் சட்ட உதவி தொடர்பாக இந்தியாபோலந்து இடையேயான உடன்பாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பரஸ்பர சட்ட உதவியின் மூலம் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குத் தொடுத்தல் புலனாய்வு ஆகியவற்றில் இருநாடுகளின் திறனையும், தீவிரத்தன்மையையும் விரிவுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களை இந்தியாவில் செயல்படுத்த 1973ஆம் ஆண்டின் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளின் கீழ், அரசிதழ் அறிவிப்புகள் வெளியிடப்படும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781732

-----

 


(रिलीज़ आईडी: 1781894) आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam