இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் வெளிநாட்டுப் பயிற்சிக்கான மாலுமிகளின் விண்ணப்பங்களுக்கு மிஷன் ஒலிம்பிக் செல் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
14 DEC 2021 2:36PM by PIB Chennai
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட மிஷன் ஒலிம்பிக் பிரிவு, அடுத்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளையொட்டி நான்கு மாலுமிகளிடம் இருந்து பெறப்பட்ட பயிற்சி மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 2.75 கோடிக்கும் அதிகமாகும்.
வருண் தக்கர் மற்றும் கே சி கணபதி (ரூ. 1.34 கோடி), நேத்ரா குமணன் (ரூ 90.58 லட்சம்) மற்றும் விஷ்ணு சரவணன் (ரூ 51.08 லட்சம்) ஆகியோர் பயணம், தங்கும் வசதி, பயிற்சியாளர் கட்டணம் ஆகியவற்றிற்காக இந்த நிதியைப் பயன்படுத்துவார்கள்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781286
*************
(रिलीज़ आईडी: 1781479)
आगंतुक पटल : 249