கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோவாவின் மர்முகோவா துறைமுகத்தில் சுற்றுலா படகு சேவையை சோனோவால் தொடங்கிவைத்தார்

प्रविष्टि तिथि: 11 DEC 2021 5:39PM by PIB Chennai

கோவாவின் மர்முகோவா துறைமுகத்தில் சுற்றுலா படகு சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று தொடங்கிவைத்தார். கோவாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் முழுமையான அனுபவத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்க எப்ஆர்பி இரண்டடுக்கு படகுகளுடன் உத்தேசப் பாதைகள் அனைத்திலும் சேவைகள் உடனடியாகத் தொடங்கும் என்று அவர் அறிவித்தார். கோவாவில் இந்த வாய்ப்பு இதுவரை பயன்படுத்தப்படாத நதி மற்றும் தீவுப் பகுதி படகு சவாரியில் புதிய சாகசப் பயணங்களுக்கு வழி திறக்கும். மேலும் கோவாவில் இதுவரை கண்டறியாத தனித்துவ அனுபவ வாய்ப்ப்பாக இது இருக்கும். 

இந்தியாவில் வளர்ந்துவரும் கடல்சார் துறை பற்றிய கண்ணோட்டம், கடலோரப் போக்குவரத்தைப் பயனுள்ள வகையில் மேம்படுத்துவது கோவாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கடல்சார் கொள்கைகள் எவ்வாறு பங்களிப்பு செய்யும் என்பது பற்றி உள்ளூர் பிரமுகர்களும் துறைசார்ந்தவர்களும் அமைச்சருடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். மர்முகோவா துறைமுகத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகள் பற்றியும் சங்கங்களுடன் அமைச்சர் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780474


(रिलीज़ आईडी: 1780496) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Telugu