சுற்றுலா அமைச்சகம்
ஹைதராபாத்தில் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ குறித்த கண்காட்சி ஒன்றை எம். வெங்கையா நாயுடு நாளை தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
11 DEC 2021 12:17PM by PIB Chennai
ஹைதராபாத்தில் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ குறித்த கண்காட்சியை குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு நாளை தொடங்கி வைக்கிறார். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் இந்தக் கண்காட்சியை நடத்துகிறது.
இந்தக் கண்காட்சி ஹரியானா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் கலை வடிவங்கள், உணவு வகைகள், திருவிழாக்கள், நினைவுச்சின்னங்கள், சுற்றுலா இடங்கள் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை முன்னிலைப்படுத்தும்.
ஹைதராபாத் நம்பல்லியில் உள்ள பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழக வளாகத்தில் 2021 டிசம்பர் 12 முதல் 14 வரை இந்தக் கண்காட்சி பார்வைக்காக திறந்திருக்கும்.
(रिलीज़ आईडी: 1780446)
आगंतुक पटल : 209