எரிசக்தி அமைச்சகம்
எரிசக்தி சிக்கன அமைப்பு, ‘வீட்டு மின் உபயோக மதிப்பீட்டிற்கான சான்றிதழ் படிப்பை தொடங்கியது
Posted On:
09 DEC 2021 12:06PM by PIB Chennai
சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக எரிசக்தி சிக்கன அமைப்பு ‘வீட்டு மின் உபயோக மதிப்பீடிற்கான சான்றிதழ் படிப்பை தொடங்கியுள்ளது.
பொறியியல்/டிப்ளமோ ஐடிஐ மாணவர்களிடையே மின் உபயோக மதிப்பீடு, மின் சக்தித் திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை இந்த சான்றிதழ் படிப்பு உருவாக்கும். இது மின் சக்தித் திறன், பருவநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
வீட்டு மின் உபயோக மதிப்பீடு (HEA) என்பது ஒரு வீட்டில் உள்ள பல்வேறு மின் உபகரணங்கள் மற்றும் சாதனங்களின் மின்சாரப் பயன்பாட்டை சரியாகக் கணக்கிடுதல், அளவிடுதல், சரிபார்ப்பு, கண்காணிப்பு ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து, அதற்கு சாத்தியமான தீர்வுகள், எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள், செலவு-பயன் பகுப்பாய்வு மற்றும் மின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான திட்டத்துடன், தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பித்தல் ஆகும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1779616
(Release ID: 1779645)
Visitor Counter : 225