தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

2021 டிசம்பர் 1 முதல் டிசம்பர் 20 வரை ‘75 லட்சம் அஞ்சல் அட்டை பிரச்சாரத்தை’ இந்தியா போஸ்ட் ஏற்பாடு செய்கிறது

Posted On: 08 DEC 2021 6:03PM by PIB Chennai

சுதந்திரத்தின் 75வது ஆண்டை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்திய அரசின் விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் கீழ், இந்திய மக்களின் புகழ்பெற்ற வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளைப் பற்றி இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அறிய வாய்ப்பளிக்கும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கல்வி அமைச்சகம் ஆகியவை இணைந்து, 75 லட்சம் அஞ்சல் அட்டை பிரச்சாரத்தை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 20, 2021 வரை நடத்துகின்றன.

சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்ட பள்ளிகள், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில கல்வி வாரியங்களை சேர்ந்த 4 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கு பெறலாம்.

50 பைசா என்ற குறைந்த விலையில் அஞ்சல் அட்டையை வாங்கலாம். இதற்காக பள்ளிகள் உள்ளூர் தபால் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருகின்றன. அஞ்சல் துறை ஒவ்வொரு அஞ்சல் அட்டையிலும் முத்திரையிடப்பட்ட முகவரியோடு புதுதில்லி–110011-ல் உள்ள சவுத் பிளாக்கில் பிரதமருக்கு அதை அனுப்புகிறது.

ஒவ்வொரு பள்ளியும் சிறந்த யோசனைகளைக் கொண்ட 10 அஞ்சல் அட்டைகளை பட்டியலிடும், மேலும் அவை சிபிஎஸ்இ பள்ளிகளால் சிபிஎஸ்இ தளத்திலும், சிபிஎஸ்இ அல்லாத பள்ளிகளால் மைகவ் தளத்திலும் பதிவேற்றப்படும். ஜனவரி 17, 2022 அன்று நடைபெறும் இறுதி நிகழ்வில் சிறந்த யோசனைகளைக் கொண்ட 75 அஞ்சல் அட்டைகள் அகில இந்திய அளவில் சிபிஎஸ்இ தலைமையகத்தால் தேர்ந்தெடுக்கப்படும்.

இந்த பிரச்சாரத்தின் வாயிலாக இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் இன்றுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சல் அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் அஞ்சல் துறையின் அதிகாரிகளால் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 7000 பள்ளிகளின் பங்கேற்புடன் 4.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அஞ்சல் அட்டைகளை அனுப்பியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779383

                                                                                 ************

 

 



(Release ID: 1779509) Visitor Counter : 217